கேரள வெள்ளத்தால் கோவையில் தஞ்சம் புகுந்த குடும்பத்தினருக்கு உதவிய கோவை பத்திரிக்கையாளர் மன்றம்

கோவை : வெள்ளத்தால் கேரள மாநிலம் தத்தளித்து வரும் நிலையில், கோவையில் தஞ்சமடைந்த எர்ணாகுளத்தைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கி கோவை பத்திரிக்கையாளர் மன்றம் உதவி செய்தனர்.

கோவை: வெள்ளத்தால் கேரள மாநிலம் தத்தளித்து வரும் நிலையில், கோவையில் தஞ்சமடைந்த எர்ணாகுளத்தைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கி கோவை பத்திரிக்கையாளர் மன்றம் உதவி செய்தனர். 

 

எர்ணாகுளத்தை சேர்ந்த பி.எஸ்.என்.எல்., ஊழியர் ஜார்ஜ் வர்க்கீஸ் என்பவர் தமிழகத்தில் 5 நாட்களாக சுற்றுலா வந்தார். இந்த நிலையில், அவரது இல்லம், வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டதால், தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட உறவினர்கள் கோவையிலேயே தங்கியிருக்குமாறு அறிவுறுத்தினர். அதன்படி, தனது குடும்பத்துடன் ஊருக்கு திரும்ப முடியாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் விடுதியில் தங்கியுள்ளார். 

இந்த நிலையில், கோவை பத்திரிக்கையாளர் சங்கத்திடம் அரிசி மற்றும் காய்கறிகள் வாங்கிக் கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொண்டதின் பேரில், இன்று உறுப்பினர்கள் அவர்களது குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.



இது குறித்து ஜார்ஜ் வர்க்கீஸின் மனைவி கொச்சுதிரேஷியா பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது :- குடும்பத்துடன் கடந்த 14-ம் தேதி வேளாங்கண்ணி சென்றோம். அங்கு மாதாவின் தரிசனம் முடித்துவிட்டு மறுநாள் ஊரிலுள்ள உறவினர்களுக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டோம். அப்போது, எர்ணாகுளத்திலுள்ள உறவினர்கள் கடும் மழையின் காரணமாக வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து விட்டதாகக் கூறினர். எனவே, ஊருக்கு வர வேண்டாம், பாதுகாப்பான இடத்தில் இருக்க அறிவுறுத்தினர். 

இதனையடுத்து, பி.எஸ்.என்.எல்., உழியர்கள் சங்கத்தை தொடர்பு கொண்டு கோவை பி.எஸ்.என்.எல்., விடுதியில் தங்கியிருந்தோம். கடந்த ஐந்து நாட்களாக இங்கு தங்கியிருக்கிறோம். எர்ணாகுளத்திலுள்ள வீட்டின் முதல் மாடியில் 25-க்கும் மேற்பட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தங்கி இருக்கின்றனர். கடந்த ஐந்து நாட்களில் கொண்டு வந்த பணம் முழுவதும் செலவழிந்த நிலையில், பத்திரிக்கையாளர்களிடம் உதவி கேட்டதின் பேரில் அரிசி மற்றும் காய்கறிகள் வாங்கி கொடுத்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம், என்றார். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...