உதகையில் பார்வையாளர்களை கவரும் தேசத் தலைவர்களின் மெழுகு சிலைகள்

நீலகிரி : உதகையில் உள்ள அருங்காட்சியகத்தில் அன்னை தெரெசா, காந்தியடிகள் உள்ளிட்ட ஒப்பற்ற தேசத் தலைவர்களின் மெழுகு சிலை உருவங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.


நீலகிரி : உதகையில் உள்ள அருங்காட்சியகத்தில் அன்னை தெரெசா, காந்தியடிகள் உள்ளிட்ட ஒப்பற்ற தேசத் தலைவர்களின் மெழுகு சிலை உருவங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.



சுற்றுலா நகரம் என்றழைக்கப்படும் உதகையில் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருவது அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, தொட்டபெட்டா சிகரம், படகு இல்லம் உள்ளிட்ட பலதரப்பட்ட சுற்றுலா தலங்கள். இந்த பட்டியலில் தற்போது சேர்ந்திருப்பது வேக்ஸ் பிளானெட் என்றழைக்கப்படும் மெழுகு அருங்காட்சியகம்.



உதகை - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளத இந்த அருங்காசியகமானது, மெழுகு சிற்பங்களை வடிவமைப்பதில் உலகிலேயே முன்னோடியாக திகழும் லண்டனிலுள்ள ஒப்பற்ற மெழுகு கலை நிறுவனமான மேடம் டஸீட்ஸ் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் இந்திய தேசத்தின் ஒப்பற்ற தலைவர்களான காந்தியடிகள், ரவீந்திரநாத் தாகூர், அன்னை தெரெசா, அப்துல் கலாம் உள்ளிட்ட தலைசிறந்த தலைவர்கள் உருவங்களுக்கு உயிரோட்டம் அளித்ததைப் போன்று வடிவமைக்கப்பட்டிருப்பது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. 



மேலும், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இன்னாள் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய பிரதமர் புடின், முன்னாள் அமெரிக்கா  அதிபர்  ஒபாமா, இன்னாள் அதிபர் டிரம்ப், சமூக சேவகர் அன்னா ஹசாரே, இந்திய கிரிக்கெட்டின் கடவுளாக கூறப்படும் சச்சின் டென்டுல்கர், கால்பந்து விளையாட்டின் முன்னனி நட்சத்திரமான மெஸ்சி உள்ளிட்ட விளையாட்டு வீரர்களின் உருவம், சினிமா நடிகர்களின் உருவங்கள் போன்றவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 



கடந்த மூன்று ஆண்டு காலமாக மெழுகு அருங்காட்சியகத்தை அமைக்க அரும்பாடுபட்டு 31 உருவங்கள் வைக்கப்பட்டிருப்பதாக அருங்காட்சியக இயக்குநர் கிஷோர் தெரிவித்தார். 



Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...