கோவை: கேரளாமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரயில் மூலம் அனுப்பும் நிவாரணப் பொருட்களுக்கு கட்டணம் கிடையாது என ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் அறிவித்துள்ளார்.

வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் கேரள மாநிலத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நிவாரணப் பொருட்கள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டித்துள்ள நிலையில், ரயிலின் மூலமே பெரும்பாலான நிவாரணப் பொருட்கள் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த நிலையில், கேரளாவுக்கு ரயில் மூலம் அனுப்பும் நிவாரணப் பொருட்களுக்கு கட்டணம் கிடையாது என ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- இந்தியா முழுவதும் இருந்து கேரளாவுக்கு ரயிலில் அனுப்பும் நிவாரணப் பொருட்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில், எம்.எம்.எஸ்., மற்றும் இணைய வசதியைப் பயன்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பி.எஸ்.என்.எல்., சார்பில் நாள் ஒன்றுக்கு 20 நிமிடங்களுக்கு இலவச 'வாய்ஸ் கால்' அனைத்து நெட்வொர்க்கிற்கும் வழங்கப்பட்டுள்ளது.