கேரளா மாநிலத்திற்காக இலவசமாக விமானத்தை இயக்கத் தயாராகும் விமானிகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக இலவசமாக விமானத்தை இயக்கத் தயாராக இருப்பதாக ஏர் இந்தியா விமானிகள் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளனர்.


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக இலவசமாக விமானத்தை இயக்கத் தயாராக இருப்பதாக ஏர் இந்தியா விமானிகள் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளனர். 

கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 320-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் வீடுகள், உடமைகளை இழந்து வாழ்வாதார நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநில மக்களுக்கு பல்வேறு வகையான உதவிகளைப் பிற மாநில அரசுகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. மேலும், ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. 

இந்த நிலையில், இந்திய வர்த்தக விமானிகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த விமானிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களை மீட்கும் பணிகளான மேடட் (madad), ஷேயாக் (sahyog) ஆப்ரேசன்களுக்கு ஈடுபடுத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும், ஏர்பஸ் 320, போயிங 787 ரக ஏர் இந்தியா விமானங்களை இயக்கும் இந்த சேவைகளுக்கு எந்தவித கட்டணமும் வேண்டாம் எனக் கூறியுள்ளனர். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...