தமிழகத்தில் ஆறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கோவை: காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் காரணத்தால் தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கோவை: காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் காரணத்தால் தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளிலிருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி மற்றும் கே.ஆர்.எஸ் போன்ற அணைகளிலிருந்து 2 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.



மேட்டூர் அணை ஏற்கெனவே முழுக் கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் தற்போது அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 1.70 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இந்நிலையில் சேலம், ஈரோடு, திருச்சி, நாமக்கல், கரூர், அரியலூர் உள்ளிட்ட 6 காவிரிக் கரையோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். மேட்டூரில் இருந்து எடப்பாடி செல்லும் பிராதான சாலை காவிரி வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் கரையோரம் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.



Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...