144 பேரை மீண்டும் பணியில் சேர்க்கவில்லை என்றால் வேலை நிறுத்தம் - பிரிக்கால் தொழிலாளர்கள்

கோவை: பிரிக்கால் ஆலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட 144 தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக ஏஐசிசிடியு தொழிற்சங்கத்தின் தேசிய தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கோவை: பிரிக்கால் ஆலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட 144 தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக ஏஐசிசிடியு தொழிற்சங்கத்தின் தேசிய தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

ஏஐசிசிடியு அமைப்பின் தேசிய செயலாளர் குமாரசாமி கோயமுத்தூர் பிரஸ் கிளப்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பிரிக்கால் ஆலை நிர்வாகம் பகுதி கதவடைப்பு என்ற பெயரில் 144 தொழிலாளர்களை கடந்த 16-ம் தேதியில் இருந்து வேலையில் இருந்து நீக்கியுள்ளது. இது சட்டவிரோதமானது. ஆலை நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் பொது அமைதிக்கும், பொது ஒழுங்கிற்கும், தொழில் அமைதிக்கும் பங்கம் ஏற்பட்டுள்ளது.

பணி நீக்கம் செய்யப்பட 144 தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க பிரிக்கால் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



ஏஐசிசிடியு அமைப்பினை சேர்ந்த 144 தொழிலாளர்களை வேண்டும் என்றே நிர்வாகம் பணியில் இருந்து நீக்கியுள்ளது. கடந்த 14-ம் தேதி தொழிலாளர்களிடம் இருந்து செய்யப்பட்ட பிடித்தங்களை திரும்ப கொடுக்க வேண்டும். பேச்சுவார்த்தை நடத்தத் தகுதியான சங்கத்தைத் தேர்தல் நடத்தி தேர்வு செய்ய வேண்டும். இதற்காகப் போராடியதன் விளைவாகவே வேலை நீக்க நடவடிக்கையினை ஆலை நிர்வாகம் எடுத்துள்ளது. 

தொழிலாளர்கள் கோரிக்கையினை நிர்வாகத்திடம் கொண்டு செல்லவும், பேச்சுவார்த்தை நடத்தவும் தகுதியான சங்கத்தை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையினை பிரிக்கால் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. வேலை நீக்க நடவடிக்கையினை ரத்து செய்யாவிட்டால் நாளை நடக்கும் தொழிற்சங்க கூட்டத்தில் வேலைநிறுத்தம் குறித்து முடிவு செய்யப்படும்.

பாரபட்சம் இல்லாத அதிகாரிகளை கொண்டு பேச்சுவார்த்தை நடத்தத் தகுதியான சங்கத்தை ரகசிய வாக்கெடுப்பு நடத்தி தேர்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...