கேரளத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார் பிரதமர் : நிவாரணமாக ரூ.500 கோடி ஒதுக்கீடு

திருவனந்தபுரம்: கேரளத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநிலத்திற்கு பேரிடர் கால நிவாரணமாக ரூ.500 கோடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.


திருவனந்தபுரம்: கேரளத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநிலத்திற்கு பேரிடர் கால நிவாரணமாக ரூ.500 கோடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.



கேரள மாநிலத்தை புரட்டிப் போட்ட மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 324-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியுள்ளனர். மேலும், பல்வேறு மாவட்டங்களில் உள்ள குடியிருப்புகள் நீரில் மூழ்கியுள்ளன. மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.



இதுவரை, 42 கடற்படை குழு, 16 ராணுவ குழு, 28 கடலோர காவல்படை குழு, 39 தேசிய பேரிடர் மீட்புக் குழு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. 

இந்த சூழலில், கேரளா சென்று வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய இருப்பதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்திருந்தார். ஆனால், நேற்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் அவரால் செல்ல முடியவில்லை.



தொடர்ந்து இன்று அதிகாலை விமானம் மூலமாக கேரளா சென்றார் பிரதமர். முதற்கட்டமாக கொச்சி பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பிரதமர் ஆய்வு செய்தார். அவருடன் கேரள மாநில ஆளுநர் சதாசிவம் மற்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் சென்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...