மனநலம் குன்றிய பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை; குழந்தையை கொஞ்சும் நெகிழ்ச்சியான தருணம்

கோவை: கோவையைச் சேர்ந்த ஈர நெஞ்சம் அறக்கட்டளையில் அடைக்கலம் பெற்ற மனநலம் பாதித்த ஆதரவற்ற பெண் ராஜலட்சுமிக்கு இன்று காலை அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.


கோவை: கோவையைச் சேர்ந்த ஈர நெஞ்சம் அறக்கட்டளையில் அடைக்கலம் பெற்ற மனநலம் பாதித்த ஆதரவற்ற பெண் ராஜலட்சுமிக்கு இன்று காலை அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.



கோவில்பாளையம் பகுதியில் செயல்படும் தனியார் மில் ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்தார் ராஜலட்சுமி என்ற 21 வயது பெண். தாய்-தந்தை அரவணைப்பில்லாத இவருக்கு மனநலம் பாதிக்க சிறுவயதில் இருந்தே தனது உறவினர்களின் நிழலில் வளர்ந்துள்ளார். 

இவரது வெகுளித்தனத்தைப் பயன்படுத்தி, தனியார் மில்லில் பணியாற்றிய ஒரு நபர் ராஜலட்சுமியை கர்ப்பமாக்க, குரல்கொடுக்க ஆதரவின்றி தனித்து விடப்பட்டார். இது குறித்து அவர் தரப்பில் போலீசாரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது. 

அப்போது ஈரநெஞ்சம் ராஜலட்சுமிக்கு ஆதரவுக் கரம் நீட்டியது. நிறைமாத கர்ப்பிணியான ராஜலட்சுமி ஈர நெஞ்சம் முதியோர் காப்பகத்தில் வசித்து வந்தார். அவருக்கு கடந்த ஜூன் மாதம் சீமந்தம் செய்து அழகு பார்த்தனர் அங்கு வசிக்கும் முதியவர்கள்.



இந்த நிலையில், பிரசவ வலி ஏற்பட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜலட்சுமிக்கு இன்று காலை 6:30 மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்து ஈர நெஞ்சத்தைச் சேர்ந்த மகேந்திரன் கூறுகையில், "ராஜலட்சுமி தனது ஆரம்ப கட்ட வாழ்க்கையிலேயே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்துள்ளார். சிறுவயதிலேயே தந்தையை இழந்தார், அவரது தாய்க்கும் மன நலம் குன்றிய நிலையில், கர்ப்பமான அவர் மிகவும் சிரமப்பட்டார். கணவன் இல்லாமல் குழந்தையை சுமப்பது கடினம் என்றும், கருவை கலைக்கக்கோரியும் பலர் ராஜலாட்சுமிக்கு அழுத்தம் கொடுத்த போதிலும் தனது திடகாத்திரமான மனத்தால் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். குழந்தையின் மீது அவர் வைத்த அன்பு வீண் போகவில்லை." என்றார்.

தனித்து விடப்பட்ட ஒரு இளம் பெண், பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். தற்போது தனது துயரங்கள் அனைத்திலும் இருந்து மீண்டு வந்துள்ளார் இந்த இரும்பு மங்கை. தற்போது பிறந்துள்ள இந்த ஆண் குழந்தை ராஜலட்சுமிக்கு மகிழ்ச்சியை மட்டும் கொடுத்திடவில்லை. அவரது கண்ணீரைத் துடைக்கவும் பிறந்துள்ளது என்றே தோன்றுகிறது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...