கோவை: சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து சாடிவயல் செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சிறுவாணி அணையின் நீர் மட்டத்தை அளவிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
கோவை: சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து சாடிவயல் செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சிறுவாணி அணையின் நீர் மட்டத்தை அளவிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடரும் கனமழை காரணமாக அங்குள்ள சாலைகளிலும், கொண்டை ஊசி வளைவுகளிலும் அவ்வப்போது நிலச்சரிவுகளும், மரங்கள் முறிந்து விழும் நிகழ்வுகளும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலச்சரிவுகளை அகற்றும் பணியும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.

சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை அளவிடும் பணிக்காக குடிநீர் வாரிய அதிகாரிகள் தினமும் அங்கு செல்வது வழக்கம். ஆனால், தற்போது அங்கு செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் சிறுவாணி அணைக்கு சென்று நீர் அளவிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில், அங்கு தற்காலிகமான மண் சாலை அமைக்கும் பனி நடைபெற்று வருகிறது.