வால்பாறை வாழைத்தோட்டம் ஆற்றை தூர்வார வலியுறுத்தி எம்.பி.,யை முற்றுகையிட்ட மக்கள்

கோவை : வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், வாழைத்தோட்டம் ஆற்றை தூர்வார வலியுறுத்தி பொதுமக்கள் எம்.பி.,யை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை : வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், வாழைத்தோட்டம் ஆற்றை தூர்வார வலியுறுத்தி பொதுமக்கள் எம்.பி.,யை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



வால்பாறையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தேயிலை தோட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. மேலும், பலரது வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், அவர்கள் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரன் வால்பாறைக்கு சென்றார்.



வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரசு போக்குவரத்து கழக பணிமனை, வாழைத்தோட்டம் ஆறு ஸ்டான்மோர் பகுதிகளை அவர் பார்வையிட்டார். அப்போது, அவரை முற்றுகையிட்ட பொதுமக்கள் வாழைத்தோட்டம் ஆறு தூர்வாரப்படாததால் தான் வெள்ளம் வீடுகளுக்குள் வருகிறது ஆகவே, ஆற்றை தூர்வாருவதுடன் தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 



அப்போது, மக்களிடம் பேசிய எம்.பி., மகேந்திரன், மழை நின்றவுடன் தூர்வாரும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர், வால்பாறை கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள முகாமிற்கு சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 



Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...