திருப்பூர்: உடுமலை அருகே விவசாய நிலங்களில் 30-க்கும் மேற்பட்ட மின்சார கம்பங்கள் சாய்ந்த நிலையில், அவற்றை அகற்றாமல் மின்வாரியத் துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது.
திருப்பூர்: உடுமலை அருகே விவசாய நிலங்களில் 30-க்கும் மேற்பட்ட மின்சார கம்பங்கள் சாய்ந்த நிலையில், அவற்றை அகற்றாமல் மின்வாரியத் துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது சோழமாதேவி கிராமம். அமராவதி அணை நிரம்பியுள்ளதால் அந்த கிராமத்தில் விவசாயிகள் நெல் நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் 450 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடிக்காக நடவு செய்யப்படவுள்ளது. நடவு பணிக்காக வயல்களில் உளவு செய்யும் பணி தொடங்கிய நிலையில், வயல்களுக்கிடையே அமைக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட மும்முனை மின்சார கம்பங்கள் பழுதடைந்தன.

இது தொடர்பாக, விவசாயிகள் கடந்த 3 மாதங்களாக புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், நேற்று முன்தினம் (15-ம் தேதி) பயங்கர காற்றுடன் பெய்த மழை பெய்ததில் மின்சார கம்பங்கள் அனைத்தும் உடைந்து விழுந்தது.
அந்த மின் கம்பிகள் வயல்வெளிகளில் விழுந்து கிடப்பதால் நடவு பணிக்கு ஆட்கள் வரத் தயங்கி வருகின்றனர். இதனால் நடவு பணி முற்றிலுமாக முடங்கியுள்ளது. இந்த சூழலில், வாய்க்கால் மற்றும் வயல்களில் அதிகளவு தண்ணீர் நிற்பதால் மின்கம்பங்களை உடனடியாக அப்புறப்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.