கோவை: கேரளா முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ. 10 கோடி என்ற தொகையை தனது அமைப்பு வழங்குமென்று ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அறிவித்திருக்கிறார்.
கோவை: கேரளா முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ. 10 கோடி என்ற தொகையை தனது அமைப்பு வழங்குமென்று ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அறிவித்திருக்கிறார்.
கேரளாவில் தொடரும் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். பெரும்பாலான வீடுகள் நீரில் மூழ்கின. 160-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த பேரிழப்பை சரிப்படுத்தும் பொருட்டு கேரளா அரசு பல்வேறு மாநிலங்களில் உதவியை நாடியது. உதவித் தொகையை வழங்குமாறு வங்கி கணக்கும் வெளியானது.
இந்த சூழலில், நிவாரணமாக ரூ.10 கோடியை தருவதாக ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அறிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஒவ்வொருநாளும் மழை மீண்டும் தொடர்ந்து பெய்து வருவதை நாம் பார்க்கிறோம்.
ஒவ்வொருமுறையும் மழை மீண்டும் பெய்யத் தொடங்கும்போது, அது இன்னும் அதிக அழிவை விளைவிக்கிறது என்று நமக்குத் தெரியும். தங்களது வீடுகளையும் மற்றும் அன்புக்குரிய நபர்களையும் இழந்திருக்கிற குடும்பங்களுக்காக எனது மனதில் கவலை நிறைகிறது. எங்களால் இயன்றவரை வெவ்வேறு வழிகளில் அவர்களுக்கு நாங்கள் உதவ விரும்புகிறோம்." என்று கூறியுள்ளார்.
மாதா அமிர்தானந்தமயி மடம் வழங்கியிருக்கிற நிதியுதவி மட்டுமின்றி கொச்சியிலுள்ள அமிர்தா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையம் மற்றும் கொல்லம் மற்றும் கல்பெட்டாவிலுள்ள அமிர்தா கிருபா சாரிடபிள் மருத்துவமனைகளிலிருந்தும் மருத்துவர்களும் மற்றும் சிறப்பு நிபுணர்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மருத்துவ சேவை வழங்குவதற்காக அனுப்பப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
