சிறுமியை திருமணம் செய்தவர் கைது: வயதை கண்டறிய சிறுமி கோவை அரசு மருத்துவமனை அழைத்து வருகை

கோவை: நீலகிரி மாவட்டத்தில் மைனர் பெண்ணை திருமணம் செய்தவரை போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ள நிலையில், வயதைக் கண்டறியும் மருத்துவ பரிசோதனைக்காக மணப்பெண் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஜோஹாசீரின் மகள் தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்த சிறுமிக்கு சுமார் 13 வயது இருக்கும். இவர்கள் குடும்பத்துடன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள இத்தாலா என்ற பகுதியில் உள்ள ஒரு தனியார் தேயிலை தொழிற்சாலையில் பணி செய்து வருகின்றனர். 

மேலும், தொழிற்சாலையின் குடியிருப்பில் அவர்கள் வசித்து வந்தனர். இதில், சூர்யாதமங் (33) என்பவர் சிறுமியை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த அவர்களின் பெற்றோர், கடந்த ஓராண்டுக்கு முன்னர் இருவருக்கும் கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், குழந்தைத் திருமணம் குறித்து தற்போது தகவலறிந்த சைல்ட் லைன் அதிகாரிகள், சிறுமி இருக்கும் பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினர். அதில், சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், நீலகிரி போலீஸார் சிறுமியை திருமணம் செய்தவர் மீது போஸ்கோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர். 

பின்னர், சிறுமியின் வயதுக்கான எந்த சான்றிதழ்களும் இல்லாததால், அவரது வயதைக் கண்டறிய கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...