டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியில் இருந்து குறைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் கேரளாவிற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளது.

முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை குறைக்கக்கோரி இடுக்கி பகுதியை சேர்ந்த ரசூல் ஜாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை உச்சநீதிமன்றம் நேற்று (வியாழக்கிழமை) விசாரித்தது. அப்போது, முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 138 அடியாகக் குறைக்க முடியுமா? என தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பியது. மேலும் முல்லைப் பெரியாறு அணையின் நிலவரம், தண்ணீர் திறப்பு, இயற்கை பேரிடர் நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தர துணைக் கண்காணிப்பு குழுவுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இன்று ஒத்திவைத்தது.
இன்று நடைபெற்ற விசாரணையில், முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை குறைப்பது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மதியம் இரண்டு மணிக்கு தொடங்கிய ஆலோசனைக் கூட்டம் அதற்கான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது.
அறிக்கையின் படி, முல்லைப் பெரியாறு அணை திடமாக உள்ளதாகவும், அதனால், கேரளாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் நீதிமன்றம் கூறியது. மேலும், அணையின் நீர் மட்டத்தை 142 அடியில் இருந்து குறைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.