கோவை : நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால், குளிப்பதற்காகவோ, துவைப்பதற்காகவோ ஆற்றில் இறங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை: நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால், குளிப்பதற்காகவோ, துவைப்பதற்காகவோ ஆற்றில் இறங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியின் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் தொடங்கி, ஆலந்துறை, பேரூர், வெள்ளலூர் உள்ளிட்ட கிராமங்களின் வழியாக சுமார் 180 கி.மீ., தூரத்திற்கு பாய்ந்து சென்று கரூரில் உள்ள காவிரியுடன் கலக்கிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருப்பதால், நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரோண்டு ஓடுகிறது. இதன் ஒரு பகுதியாக ஆலந்துறை பகுதியை கடக்கும் நொய்யல் ஆற்றில், 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தண்ணீர் பெருக்கெடுத்தோடுகிறது. தற்போது, நொய்யல் ஆற்றில் 4-வது நீர்மட்டக் கல் அளவிற்கு தண்ணீர் பாய்ந்து வருகிறது.

இது தொடர்பாக அப்பகுதி விவசாயி ஒருவர் கூறுகையில், "12 ஆண்டுகளுக்கு முன்பு நொய்யல் ஆற்றில் இது போன்ற வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதைப் பார்த்துள்ளேன்," என்றார்.
இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆலந்துறை நொய்யல் ஆற்றில் பொதுமக்கள் இறங்க வேண்டாம் என அக்கிராம பஞ்சாயத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், குளிக்கவோ, துணிகளைத் துவைக்கவோ அல்லது புகைப்படம் எடுக்கவோ கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.