கோவை: கேரளாவில் நீட் தேர்வு பயிற்சிக்காக சென்று, மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட தமிழக மாணவர்களை உடனடியாக மீட்கக் கோரி மாணவர் காங்கிரஸ் அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: கேரளாவில் நீட் தேர்வு பயிற்சிக்காக சென்று, மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட தமிழக மாணவர்களை உடனடியாக மீட்கக் கோரி மாணவர் காங்கிரஸ் அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
முன்னதாக இது தொடர்பாக கோவை மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் உதயகுமார் கூறியதாவது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நீட் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்வதற்காக நூற்றுக்கணக்கான மாணவர்கள் திருச்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயின்று வருகின்றனர். தற்போது, கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குப் பயின்று வரும் தமிழக மாணவர்களிடம் தொடர்பு கொள்ள முடியாமல் அவர்களது பெற்றோர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
குறிப்பாக, திருச்சூர் மாவட்டம் சைத்தன்யா மற்றும் சாக்தன் தம்புரான் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களின் நிலை என்னவென்றே தெரியாத சூழல் உள்ளது. இதனால், தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு, அங்குள்ள தமிழக மாணவர்களைப் பத்திரமாக மீட்டுக் கொண்டு வர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக முதலமைச்சரின் தனி பிரிவுக்கு கடிதம் அனுப்ப உள்ளோம், என்றார்.