நீலகிரி: கேரளாவில் பெய்து வரும் கனமழை பாதிப்பால் பல பேர் உணவின்றியும், உடைகள் இன்றியும் தவித்து வரும் நிலையில், இன்று உதகையில் இருந்து பல்வேறு சமூக நல அமைப்புகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழை வெள்ளத்தால் இதுவரை 75-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும், குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்த சூழலில், அம்மாநில மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்க உதகையில் உள்ள பல சமூக அமைப்புகள் அத்தியாவசிய பொருட்களை திரட்டின. அரிசி, பிஸ்கட், பால், மலைக்காய்கறிகள், போர்வை, பாய், நாப்கின்கள், பிளாஸ்டிக் பக்கெட்டுகள், மருந்து, மாத்திரைகள், மளிகை பொருட்கள், துணிமணிகள், தண்ணீர் பாட்டில்கள், மெழுகுவர்த்தி போன்ற பொருட்கள் சேர்ந்தன.

இதனையடுத்து, சேகரிக்கப்பட்ட பொருட்கள் உதகை பிங்கர் போஸ்ட் பகுதியில் அமைந்து மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டன. அதன் பின்னர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நல அமைப்புகள் மூலம் ரூ.4 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை கேரளாவிற்கு எடுத்துச் செல்லும் வாகனங்களை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார்.