பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கிய சோகம்

கோவை: கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் பவானியாற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால், 100-க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மூழ்கின.

கோவை: கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் பவானியாற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால், 100-க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மூழ்கின. 



தமிழக - கேரள எல்லையோரத்தில் மேட்டுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பில்லூர் அணை மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கேரளக்காடுகள் மற்றும் நீலகிரி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு நிரம்பியது. இதனால், அணைக்கு வரும் வினாடிக்கு 57,000 கனஅடி தண்ணீர், அப்படியே பவானியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

ஏற்கனவே, தொடர் மழை காரணமாக கரைபுரண்டோடும் பவானியாற்றில், பில்லூர் அணையின் உபரிநீரும் சேர்ந்து ஓடுவதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை போன்ற பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்கள் அனைத்திலும் வெள்ளம் புகுந்தது. 

இந்த நிலையில், இன்று அதிகாலை மேட்டுப்பாளையத்தில் உள்ள சாமண்ண நீரேற்று நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனையடுத்து, அப்பகுதிக்கு சென்ற வருவாய்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் அப்பகுதி மக்களை, மேடான பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 

மேலும், சிறுமுகை பகுதியிலும் 40-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டதால், அங்குள்ள மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனிடையே, கரையோரத்தில் வசிக்கும் மக்கள் உடனடியாக தங்களது உடமைகளை எடுத்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்துறையினர் மற்றும் காவல்துறையினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 



Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...