திருப்பூரில் போலி சான்றிதழ் கொடுத்து பணி உயர்வு பெற்ற மாநகராட்சி அதிகாரி மீது வழக்கு

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் போலி சான்றிதழ் கொடுத்து பணி உயர்வு பெற்ற மாநகராட்சி இளநிலை பொறியாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் போலி சான்றிதழ் கொடுத்து பணி உயர்வு பெற்ற மாநகராட்சி இளநிலை பொறியாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி பொறியியல் பிரிவில் பணி ஆய்வாளராக கடந்த 1992-ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர் சந்திரசேகர். இவருக்கு கடந்த 2007-ம் ஆண்டு மாநகராட்சி இளநிலை பொறியாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மாநகராட்சி ஒப்பந்ததாரர் கனகராஜ் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் அடிப்படையில் பதவி உயர்வுக்கு தேவையான தொழிற் கல்வி படிப்பில் தேர்வடையாமல், தேர்வடைந்ததாக பொய்யாக சான்றிதழ் கொடுத்து பதவி உயர்வு பெற்றது தெரிய வந்தது.

இதனையடுத்து கனகராஜ் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் ஊரக காவல்துறையினர், சந்திரசேகர் மீது மோசடி செய்தல் (IPC- 420) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...