கோவை: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக சிறுவாணி அணை 3-வது முறையாக நிரம்பி வழிகிறது.

கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.
இதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை, மீண்டும் அதன் மொத்தக் கொள்ளளவான 50 அடியை எட்டியுள்ளது. இதனால், கோவை மாநகர் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்றும் மழை நீடித்ததால், நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜுலை 2-ம் தேதி அதன் கொள்ளளவை எட்டியது. தொடர் மழையினால், அதே மாதம் 14-ம் தேதி அணை மீண்டும் நிரம்பி வழிந்தது.
இதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக சிறுவாணி நீர்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக பெய்து வருகிறது. நேற்று மட்டும் இந்தப் பகுதிகளில் 122 மி.மீ., மழை பதிவாகியது. இந்த நிலையில், சிறுவாணி அணை 3-வது முறையாக நிரம்பி வழிகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரும், கொள்ளளவை எட்டியதால் நிரம்பி வழியும் உபரிநீர் பில்லூர் அணையைச் சென்றடைகிறது.