கூடலூர் அருகே யானை தாக்கி ஆட்டோ ஓட்டுநர் பலி : உயிரிழப்பைக் கண்டித்து கிராமசபைக் கூட்டத்தில் அரைநிர்வாணத்தில் பங்கேற்ற பொதுமக்கள்

நீலகிரி: கூடலூர் அருகே இருந்த ஆட்டோ ஓட்டுநரை யானை தாக்கி கொன்ற சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமசபை கூட்டத்தில் சேரங்கோடு மக்கள் அரைநிர்வாணத்தில் கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி: கூடலூர் அருகே இருந்த ஆட்டோ ஓட்டுநரை யானை தாக்கி கொன்ற சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமசபை கூட்டத்தில் சேரங்கோடு மக்கள் அரைநிர்வாணத்தில் கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பந்தலூர் தாலுகாவில் உள்ள சேரம்பாடி சப்பம்ந்தோடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அசோக்குமார் (31). இவர் நேற்று வீட்டில் இருந்த போது, இரவு 10 மணியளவில் வீட்டின் பின் பக்கம் யானையின் சத்தம் கேட்டது. 

அப்போது, அவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு முன்பக்க அறையில் விட்டுள்ளார். பின்னர், சமையல் அறையின் பக்கம் சென்று மெதுவாகக் கதவை திறந்து வெளியே எட்டிப் பார்த்துள்ளார். 

அப்போது, இருளில் அருகில் நின்று கொண்டிருந்த யானை அசோக்குமாரை துதிக்கையால் இழுத்து கீழே போட்டு மிதித்தது. 

இதனால், ஏற்பட்ட அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்க முயன்றனர். ஆனால், யானை அதே இடத்தில் நின்று கொண்டிருந்ததால், பொதுமக்களால் ஏதும் செய்ய முடியவில்லை. பின்னர், இது குறித்து தகவல் அறிந்த சேரம்பாடி ரேஞ்சர் மனோகரன் மற்றும் பறக்கும் படை சரகர் கணேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். 

இருப்பினும், இரவு 12 மணி வரை யானை அங்கிருந்து செல்லாததால், பலத்த காயமடைந்த அசோக்குமார் அங்கேயே உயிரிழந்தார். பிறகு, யானை அங்கிருந்து சென்றவுடன் உடலை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனிடையே, கூடலூர் எம்.எல்.ஏ., திராவிடமணி அசோக்குமாரின் இல்லத்திற்கு சென்று அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். இதனிடையே, சேரங்கோடுவில் இன்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் அசோக்குமாரின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரை நிர்வாணத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...