72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

நாடு முழுவதும் 72-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிக்கண்ணா அரசு கலை கல்லூரியில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இங்கு, மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டது.
மேலும், சிறப்பாகப் பணியாற்றிய காவலர்கள், அரசு அதிகாரிகளுக்குப் பாராட்டு சான்றிதழை வழங்கினார். மேலும், சுதந்திர தின விழா நினைவாக புறா மற்றும் பலூன்கள் பறக்கவிடப்பட்டது. 200-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ. 52 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இறுதியாக, துப்பறியும் நாய்களின் சாகச நிகழ்ச்சியும், பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் மாநகர காவல் ஆணையர் மனோகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல, 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தேசிய கொடி ஏற்றி, வைத்து காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்து, 11 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 60 ஆயிரத்திற்கான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார். மேலும், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு, குறிப்பாக மந்தடா பகுதியில் 9 பேர் உயிரிழந்த பேருந்து விபத்து சம்பவத்தின் போது துரிதகதியில் பணியாற்றிய போலீசார், தீயணைப்புத்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ்களும், விருதுகள் வழங்கி கவுரவித்தார்.

மேலும், சுதந்திரப் போராட்ட தியாகி ஆலகவுடரை அவர் கவுரவித்தார். இதனைத் தொடர்ந்து, பழங்குடியினரான கோத்தர், தோடர் இன மக்கள் தங்களின் கலாச்சார உடை அணிந்து நடனம் ஆடியது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது. இதேபோல, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.