முதலமைச்சர் பங்கேற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கு வெடிகுண்டு மிரட்டல்: கோவையைச் சேர்ந்த நபர் கைது

கோவை: சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை மற்றும் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோவையைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை: சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை மற்றும் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோவையைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் குருக்கள் பட்டியைச் சேர்ந்தவர் மாரிராஜா. இவர், கோவை இதய தெய்வம் மாளிகை அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பணி நடைபெறும் இடத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். 

இந்த நிலையில், இன்று நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்ற முடியாது எனவும், சென்னையில் உள்ள கோட்டையில் குண்டு வெடிக்கும் என மாரி ராஜா சென்னை காவல் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். 

இது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்ததில், இவர் கோவையில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ரேஸ்கோர்ஸ் போலீசார் இன்று பணியில் இருந்த மாரிராஜாவை, குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்ததற்காகக் கைது செய்தனர். 

இவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 294பி, 506, 507 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இவர் எதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்..? இவருக்கு வேறு ஏதாவது கும்பலுடன் தொடர்பு உள்ளதா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மாநிலம் முழுவதும் சுதந்திர தினத்தையொட்டி அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு நிலையில், முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு வெடிகுண்டு விடுத்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...