கோவையில் பயனாளிகளுக்கு ரூ. 44 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கோவை: கோவை வ.உ.சி., மைதானத்தில் நடைபெற்ற 72-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் போது மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ. 44,22,980 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

கோவை: கோவை வ.உ.சி., மைதானத்தில் நடைபெற்ற 72-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் போது மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ. 44,22,980 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. 

வ.உ.சி. மைதானத்தில் நடந்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது, பல்வேறு துறைகள் சார்பில் ரூ. 44,22,980 ரூபாய்க்கான நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சியர் த.நா. ஹரிஹரன் வழங்கினார். 

வேளாண்துறை சார்பில் வேளாண் பொருட்கள் வழங்குதலுக்கு ஐந்து பேருக்கு 66,477 ரூபாயும், தோட்டக் கலைத் துறை கோகோ நாற்றுகள் மற்றும் வெங்காயப் பட்டறை அமைக்க 3 பேருக்கு ரூ. 1,87,000-ம், தாட்கோ வங்கி மூலம் வாகனங்களுக்கு ஐந்து பயனாளிகளுக்கு ரூ. 26,93,427-ம் வழங்கப்பட்டது. 

இதேபோல, மாற்றுத் திறனாளிகள் துறை சார்பில் செயற்கை கால் ஒரு நபருக்கு ரூ. 25,500-ம், மகளிர் மேம்பாட்டுத் திட்டம் சார்பில் தொழில் செய்யக் கடனுதவியாக பத்து பேருக்கு ரூ. 10,00,000-ம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் சார்பில் ரூ. 79,680 மதிப்புள்ள எட்டு பேருக்கு தையல் இயந்திரமும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலவாரியம் மூலம் ரூ. 90,324 செலவில் 18 பேருக்கு சலவைப் பெட்டியும் வழங்கப்பட்டது. 



வருவாய் துறை மூலம் முதியோர் உதவித் தொகை அன்னூர் வட்டத்திற்கு 86 பேருக்கு ரூ. 86,000-ம், மேட்டுப்பாளையம் வட்டத்திற்கு 124 பேருக்கு 1,24,000-ம், சூலூர் வட்டம் 29 பேருக்கு ரூ. 55,000-ம், கோவை வடக்கு வட்டம் 15 பேருக்கு ரூ. 15,000 என 304 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...