11-வது முறையாகப் படைகளுக்கு தலைமை தாங்கிய கோவை மாநகர ஆயுதப்படை ஆய்வாளர் ரவிசந்திரன்

கோவை: கோவை வ.ஊ.சி. மைதானத்தில் நடைபெற்ற 72-வது சுதந்திர தினவிழாவில் அணிவகுத்தப் படைகளுக்கு மாநகர ஆயுதபடை ஆய்வாளர் ரவிசந்திரன் 11-வது முறையாக தலைமை தாங்கிய பெருமையை பெற்றார்.

கோவை: கோவை வ.ஊ.சி. மைதானத்தில் நடைபெற்ற 72-வது சுதந்திர தினவிழாவில் அணிவகுத்தப் படைகளுக்கு மாநகர ஆயுதபடை ஆய்வாளர் ரவிசந்திரன் 11-வது முறையாக தலைமை தாங்கிய பெருமையை பெற்றார்.

கோவை வ.ஊ.சி. மைதானத்தில் 72-வது சுதந்திர தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காலை 9.20 மணிக்கு மாவட்ட ஆட்சியர் த.நா. ஹரிஹரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். 

இதில், கோவை ஆயுதபடை ஆய்வாளர் ரவிசந்திரன் தலைமையில் 22 படைகளுக்கு 11-வது முறையாக தலைமை தாங்கினார். இவரது தலைமையில் ஆயுதப்படை முதலாம் அணியை உதவி ஆய்வாளர் முகமது அனஸும், இரண்டாம் அணியை சக்தியும், மூன்றாம் அணியை உதவி ஆய்வாளர் சக்தி ஆகியோர் தலைமை தாங்கினார்.



வாத்திய இசை குழுவை காவலர் விமல்ராஜ், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையை நிலைய அலுவலர் முத்துகுமாரசாமி, ஊர்காவல் படை ஆண்கள் பிரிவை எட்வின் ஆல்ட்ரினும், பெண்கள் பிரிவை உமாவதி, போக்குவரத்து காப்பாளர் பிரிவை சுரேஷ், தேசிய மாணவர் விமானப் படையை சேதுபதி, ராணுவப் படையை முனியசெல்வம், பெண்கள் பிரிவை பிரேமாவும், அவிநாசிலிங்கம் மேல்நிலைப் பள்ளி பெண்கள் படையை பீரீத்தி ஆகியோர் வழிநடத்தினர்.

சாலைப் பாதுகாப்பு படை ஆண்கள் படையை சதீஷும் மற்றும் பெண்கள் படைக்கு ரஜியா சுல்தானாவும், ரெட் கிராஸை உதயா மற்றும் பத்மலட்சுமியும், சாரணியர் இயக்கத்தை ரோசன் பாபு மற்றும் சோனாவும், தேசிய சேவை திட்டப் படையை சபில் நஸ்மின், நிறைவின் குதிரை படையை சுகந்தராஜா என 22 படைகளைச் சேர்ந்த 587 பேரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ஏற்றுக் கொண்டார். பின்னர், அவர்களுக்கு ஆட்சியர் வாழ்த்துகளைத் தெரிவித்தார். 

மேலும், மாநகர காவல் ஆணையர் பெரியய்யாவும், வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...