கோவை: பொதுமக்களிடையே தொழிற்துறை வளர்ச்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் செய்திகளை வெளியிட்ட நிருபருக்கு பாராட்டு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் விருது வழங்கிப் பாராட்டினார்.

72-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவின் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் சிறப்பாக செயலாற்றிய விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவன ஊழியர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.
இதேபோல, செய்தித்துறையில் சிறப்பான செயல்பட்டதற்காக கோவை இந்தியன் எக்ஸ்பரஸ் தினசரி நாளிதழில் பணியாற்றி வரும் ராஜகோபாலுக்கு விருது வழங்கப்பட்டது. தொழிற்துறை வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு செய்திகள் வெளியிட்டதற்காக அவருக்கு இந்தப் பரிசினை மாவட்ட ஆட்சியர் த.நா., ஹரிஹரன் வழங்கினார்.