வயநாட்டைச் சென்றடைந்தது '#CBE4KERALA' குழுவின் முதற்கட்ட நிவாரணப் பொருட்கள்

மழையால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட '#CBE4KERALA' குழுவின் முதற்கட்ட நிவாரணப் பொருட்கள் வயநாட்டைச் சென்றடைந்துள்ளது.


மழையால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட '#CBE4KERALA' குழுவின் முதற்கட்ட நிவாரணப் பொருட்கள் வயநாட்டைச் சென்றடைந்துள்ளது. 



கேரள மாநிலத்தில் பெய்து பெய்து வரும் கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. அம்மாநில மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நேரத்தில், நமது சகோதர, சகோதரிகளான கேரள மக்களுக்காக கரம் கொடுப்பது நமது கடமை என்று உணர்ந்தோம். சகோதரத்துவத்தை உணர்ந்த நமது கோவை மக்கள், கேரளாவில் தவிக்கும் மக்களுக்காக சிறு உதவியேனும் செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டிருக்கின்றனர்.

அவ்வாறான மக்களைத் திரட்டி பெரும் அளவிலான பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்காக அனுப்ப உள்ளோம். இந்த சமூக நலப் பணிக்காக கோவையில் உள்ள தனியார் அமைப்புகள், தன்னார்வலர்கள் மற்றும் பல்வேறு ஊடகங்கள் முன்வந்துள்ளன. 

இதற்காக, '#CBE4KERALA' என்ற குழு உருவாக்கப்பட்டு, 12 இடங்களில் நிவாரண உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கேரள மக்களுக்கு உதவ நினைக்கும் கோவை மக்கள் நன்கொடையளிக்க தகுந்த பொருட்களை (புதிய உடைகள், புத்தகங்கள், பேனா, புத்தகப்பை, மெழுகுவர்த்திகள், சானிடரி நாப்கின்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள்) எங்களது குழுவினரான '#CBE4KERALA'-விடம் கொடுக்கலாம். 

இந்த நிலையில், மருந்து மற்றும் ஆடைகள் என முக்கியப் பொருட்களுடன் முதற்கட்ட நிவாரணப் பொருட்கள் நேற்றிரவு வயநாடு சென்றடைந்தது. அதனை அங்குள்ள தன்னார்வலர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்து வருகின்றனர். 



"கோவையில் இருந்து கொண்டு வரப்பட்ட நிவாரணப் பொருட்கள் பாதுகாப்பாக வயநாடு வந்தடைந்தது. எங்களது தன்னார்வலர்களும், நிவாரணப் பொருட்கள் ஏற்றி வந்த லாரியிலே இங்கு வந்தனர். அவர்கள் தேவைப்படுவோருக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர்," என்றார் #CBE4KERALA'-வின் உறுப்பினர் அருண் பாண்டியன். 

தொடர்ந்து, கேரளாவிற்கு பல்வேறு கட்டமாக நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட இருப்பதால், உதவ நினைப்பவர்கள் தயங்காமல் எங்களுடன் கைகோருங்கள். கோவையில் எந்தெந்த பகுதிகளில் நன்கொடைகளை வழங்கலாம் என்பதையும், அதற்கான தொடர்பு எண்களையும் கீழே உள்ள போஸ்டரில் பட்டியலிட்டுள்ளோம். உதவிக்கரம் நீட்ட முனைவோர் உடனடியாக உதவலாம்.

இதனிடையே, மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு பகுதிகளை '#CBE4KERALA' குழுவினர் சில புகைப்படங்களை எடுத்துள்ளனர்.











Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...