மதுவிற்பனைக்கு தர மறுத்ததால் கடத்தப்பட்ட பார் உரிமையாளர் அரை மணி நேரத்தில் மீட்பு: போலீசாருக்கு குவியும் பாராட்டு

திருப்பூர்: திருப்பூரில் டாஸ்மாக் பாரில் அதிகளவு மது விற்பனைக்குத் தர மறுத்ததால், கடத்தப்பட்ட பார் உரிமையாளரை அரைமணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.

திருப்பூர்: திருப்பூரில் டாஸ்மாக் பாரில் அதிகளவு மது விற்பனைக்குத் தர மறுத்ததால், கடத்தப்பட்ட பார் உரிமையாளரை அரைமணி நேரத்தில் போலீசார் மீட்டனர். 

திருப்பூர் - காங்கயம் சாலை, புதுப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் பார் நடத்தி வருபவர் குமார். நேற்று இவரது பாருக்கு மது அருந்த வந்தவர்கள் நாளை (ஆக.,15) சுதந்திர தினத்தினால் கடை விடுமுறை என்பதால், அதிகளவில் மது வாங்கித் தருமாறு கேட்டுள்ளனர். ஆனால், இதற்கு பார் உரிமையாளர் மறுப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, அவர்களிடையே ஏற்பட்ட தகராறில் பாரை அடித்து உடைத்து குமாரை அங்கிருந்து கடத்தி சென்றுள்ளனர். 

இதனைத் தொடர்ந்து, பார் ஊழியர்கள் ஊரக காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், போலீசார் துரிதமாக செயல்பட்டு படியூர் சோதனை சாவடி அருகே பார் உரிமையாளரை மீட்டனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ஆயுதங்கள், இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...