மாணவ, மாணவிகள் குறைகளைக் கூற புகார் எண் அறிமுகம் : சுதந்திரத் தினம் முதல் அமலுக்கு வருகிறது

ஈரோடு: மாணவ, மாணவிகள் தங்களது குறைகள் மற்றும் புகார்கள் பற்றிக் கூற கல்வித்துறை சார்பில் 14417 என்ற புதிய எண்ணை பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஈரோடு: மாணவ, மாணவிகள் தங்களது குறைகள் மற்றும் புகார்கள் பற்றிக் கூற கல்வித்துறை சார்பில் 14417 என்ற புதிய எண்ணை பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நாகதேவன் பாளையத்தில் ரூ. 2 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டப்படுகிறது. இதற்கான பணி தொடக்க விழா இன்று நடந்தது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். 

அப்போது, அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் 1 லட்சம் மாணவ, மாணவிகள் சேர்ந்து உள்ளனர். அடுத்த ஆண்டு 3 லட்சம் மாணவ- மாணவிகள் அரசுப் பள்ளியில் சேர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகர பகுதிகளைப் போல் மலைப்பகுதி அரசுப் பள்ளிகளிலும் ‘‘ஸ்மார்ட் கிளாஸ்’’ ஆரம்பிக்கப்படும். மலைப் பகுதி பள்ளிகளும் கணினிமயமாக்கப்படும்.

மாணவ, மாணவிகள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை கூறுவதற்காக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 14417 என்ற புதிய எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண் மூலம் மாணவ, மாணவிகள் தங்களது புகார் மற்றும் குறைகளை தெரிவிக்கலாம். புகார் கூறுபவர்கள் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும். தொடர்ந்து இதன் மீது விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நாளை (ஆக.,15) முதல் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இந்தியாவிலேயே முதன்முதலாக இந்தத் திட்டம் தமிழகத்தில் தான் தொடங்கப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...