17 ஆண்டுகளுக்குப் பிறகு அப்பர்பவானி, எமரால்டு, அவலாஞ்சி அணைகள் திறப்பு

நீலகிரி: தொடர் கனமழையின் காரணமாக 17 ஆண்டுகளுக்குப் பின் அப்பர் பவானி, எமரால்டு, அவலாஞ்சி ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளன.

நீலகிரி: தொடர் கனமழையின் காரணமாக 17 ஆண்டுகளுக்குப் பின் அப்பர் பவானி, எமரால்டு, அவலாஞ்சி ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளன. 



நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் பெரிய அணை மஞ்சூர் அருகே உள்ள அப்பர் பவானி அணையாகும். 210 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பரளி உள்ளிட்ட மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, அப்பர்பவானி அணையானது மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால், இப்பகுதியில் மழை தீவிரமாக பெய்து வருகிறது. 



இதனால், நீர்வரத்து அதிகரித்த நிலையில், அப்பர் பவானி அணை முழு கொள்ளளவை எட்டியது. வினாடிக்கு 1,000 கனஅடிக்கு மேல் நீர்வரத்து காணப்படுவதால், அணையின் பாதுகாப்பு கருதி அப்பர் பவானி அணை திறக்கப்பட்டுள்ளது.

கடைசியாக கடந்த 2001-ம் ஆண்டு அப்பர்பவானி அணை திறந்து விடப்பட்டது. அதைத் தொடர்ந்து, 17 ஆண்டுகளுக்குப் பிறகு அணை தற்போது திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்பர்பவானி அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரானது அடர்ந்த காடுகள் வழியே கேரளா மாநிலத்திற்குள் பல கிலோ மீட்டர் தூரம் பயணித்து மீண்டும் தமிழகத்தின் அத்திக்கடவு வழியாக பில்லுார் அணைக்கு செல்கிறது என்பது சிறப்பம்சமாகும். 

இதேபோல, மஞ்சூர் அருகே உள்ள அவலாஞ்சி, எமரால்டு, குந்தா உள்ளிட்ட அணைகளில் இருந்தும், தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அப்பர்பவானி, எமரால்டு, அவலாஞ்சி ஆகிய அணைகளில் இருந்து ஒரே நேரத்தில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், அப்பகுதியில் உள்ள 12 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...