தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் மறைந்த கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் மறைந்த கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை:  சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் மறைந்த கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை, அறிவாலயத்தில், இன்று காலை, 10:00 மணிக்கு துவங்கிய இந்தக் கூட்டத்திற்கு செயல் தலைவர், ஸ்டாலின் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாநில நிர்வாகிகள் என, 750 பேர் பங்கேற்றனர். செயற்குழு கூட்டத்தில் கருணாநிதியின் சாதனைகளை பட்டியலிட்டு இரங்கல் தீர்மானம் டி.கே.எஸ். இளங்கோவனால் வாசிக்கப்பட்டது. 



இரங்கல் தீர்மானத்தில் இடம்பெற்றிருப்பதாவது: பொதுவாழ்வில் ஈடுபடுவோர் பின்பற்றக்கூடிய பல்கலைக்கழகம் திமுக தலைவர் கருணாநிதி. கை ரிக்‌ஷா ஒழிப்பு, குடிசை மாற்று வாரியம், உழவர் சந்தை, நமக்கு நாமே திட்டங்களை கொண்டு வந்தவர். கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு தொடர முனைப்பு காட்டியவர் கருணாநிதி. சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள், தேசியக்கொடியேற்றும் உரிமையை பெற்றுத் தந்தார்.  பெண்களுக்கு சொத்துரிமை கிடைக்க நடவடிக்கை எடுத்தவர். 

மகளிருக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33% இட ஒதுக்கீடு அளித்தவர் திமுக தலைவர் கருணாநிதி. ஈழத் தமிழர்களின் உரிமைக்காக 1956 முதலே குரல் கொடுத்து வந்தவர் திமுக தலைவர் கருணாநிதி. கிராமப்புறங்களில் அரசு கல்லூரிகளை அமைத்தவர் கருணாநிதி. வள்ளுவர் கோட்டம் முதல் கன்னியாகுமரி வரை தமிழ் பரப்பியவர் கருணாநிதி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பின்னர், கூட்டத்தில் கருணாநிதி மறைவுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 



இதைத் தொடர்ந்து, கூட்டத்தில் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., பேசியதாவது;- நமக்கு எதிராக செயல்படும் அந்த உறவை நேரடியாக செயல் தலைவர் ஸ்டாலின் துண்டிக்க வேண்டும். எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கண்டிக்க வேண்டும். செயல் தலைவர் ஸ்டாலினை தலைவராக தான் நாங்கள் பார்க்கிறோம். தி.மு.க., தலைவர் கருணாநிதியை ஸ்டாலின் மூலம் பார்க்கப்போகிறோம். சில இலைகள் தி.மு.க.,வில் உதிரலாம், ஆனால் தி.மு.க., என்பது ஆலமரம், இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க., செயற்குழு அவசர கூட்டத்தில் வி.பி. துரைசாமி பேசும் போது :- பெரியார், அண்ணா, கருணாநிதி என அனைத்தும் இனிமேல் ஸ்டாலின் தான் எனக் கூறினார்.



டி.ஆர்.பாலு பேசியதாவது :- வெற்றிடத்தை காற்று நிரப்புவதுபோல் கருணாநிதி இடத்தை ஸ்டாலின் நிரப்புவார். என்றார். 

முன்னாள் அமைச்சர் துரை முருகன் பேசியதாவது :- பொது வாழ்வில் எப்படி வாழ வேண்டும் என்பதை எனக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி கற்பித்தார். உறங்கும் நேரம் தவிர மற்ற நேரம் அனைத்தும் கருணாநிதியுடன் இருக்கும் வாய்ப்பை பெற்றேன். அறுவை சிகிச்சை மேற்கொண்ட எனக்கு 2-வது முறையாக உயிர் கொடுத்தவர் கருணாநிதி. சுய மரியாதையுடன் இருக்க வேண்டும் என்பார் தி.மு.க., தலைவர் கருணாநிதி. எம்.ஜி.ஆர். உடன் நான் நெருக்கமாக இருந்தாலும், தி.மு.க., தலைவர் கருணாநிதியை பிரியவில்லை. எம்.ஜி.ஆர்., அழைத்தபோது கருணாநிதியின் காலடியில் இருந்தவன் நான். 

எனது இரங்கல் கூட்டத்தில் கருணாநிதி உரையாற்றுவார் என நினைத்திருந்தேன். அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஊடல், சண்டை, மன வருத்தம் என எதுவும் இல்லை. பெரியார், அண்ணா, கருணாநிதியின் மூன்று இதயங்களை கொண்டவர் மு.க.ஸ்டாலின். இந்த மூன்று இதயங்களை வெல்ல தமிழகத்தில் ஒரு கொம்பனும் இல்லை. தி.மு.க.,வை வழிநடத்த மு.க.ஸ்டாலின் என்னும் ஆலவிழுதை தி.மு.க., தலைவர் கருணாநிதி விட்டுச்சென்றுள்ளார், இவ்வாறு அவர் கூறினார்.



இதைத் தொடர்ந்து, பேசிய தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின், தனது உரையை 'என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே' என்ற தாரக மந்திரத்துடன் தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது :- நான் தலைவரை மட்டுமல்ல. தந்தையையும் இழந்திருக்கிறேன். மேலும், கலைஞர் இல்லாமல் செயற்குழு கூட்டம் நடைபெறுவதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கெஞ்சிக் கேட்டும் மெரினாவில் கலைஞருக்கு இடம் தர மறுத்தார். நமது வழக்கறிஞர் அணியினரின் சீரிய முயற்சியால் நமது கனவு நினைவானது. எனவே, அனைத்துப் பெருமைகளும் நமது வழக்கறிஞர் அணியையே சாரும், என்றார். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...