வாழத்தகுந்த நகரங்கள் பட்டியலில் சென்னைக்கு 14வது இடம்: கோவைக்கு எந்த இடம் தெரியுமா?

கோவை: மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் கவலையும், நெருக்கடியும் இன்றி மக்கள் வசிக்கும் நகரங்களின் பட்டியலை தயாரித்து வெளியிட்டு வருகிறது.


கோவை: மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் கவலையும், நெருக்கடியும் இன்றி மக்கள் வசிக்கும் நகரங்களின் பட்டியலை தயாரித்து வெளியிட்டு வருகிறது.

சிறந்த நிர்வாகம், சமூக நிறுவனங்கள், பொருளாதார நிலை மற்றும் மக்களின் வாழ்க்கைச் சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான போட்டியில் கொல்கத்தா தவிர நாட்டின் 111 நகரங்கள் கலந்து கொண்டன.

இந்த நகரங்களின் வரிசை பட்டியலை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார மந்திரி ஹர்தீப் சிங் புரி டெல்லியில் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டார்.

இதில் மக்கள் கவலையின்றி வசிக்கும் சிறந்த நகரமாக மராட்டிய மாநிலத்தின் புனே முதலிடம் பிடித்தது. நவி மும்பைக்கு 2-வது இடம் கிடைத்தது. நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பை 3-வது இடத்தைப் பிடித்தது. இதைத்தொடர்ந்து திருப்பதி, சண்டிகார், தானே, ராய்ப்பூர், இந்தூர், விஜயவாடா, போபால் ஆகியவை முறையே 4 முதல் 10-வது இடங்களைப் பிடித்தன. 

தமிழகம்

இந்த பட்டியலில் சென்னை நகருக்கு இதில் 14-வது இடம் கிடைத்தது. திருச்சி நகருக்கு 12-வது இடம் கிடைத்துள்ளது. கோவை நகருக்கு 25-வது இடம் கிடைத்துள்ளது. தொடர்ந்து, ஈரோடு 26-வது இடத்தையும், மதுரை 28-வது இடத்தையும், திருப்பூர் 29-வது இடத்தையும் பிடித்துள்ளன.



Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...