புற்றுநோயாளிகளுக்காக தலைமுடியை தானமாக வழங்கிய கல்லூரி மாணவிகள்

கோவை : புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது தலை முடியை தானமாக வழங்கினர்.


கோவை : புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது தலை முடியை தானமாக வழங்கினர். 



பி.எஸ்.ஜி., மேலாண்மை கல்லூரியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் சார்பில் 'விருக்ஷா' என்ற வாராந்திர நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக 'ரெட் ரிப்பன்' என்ற தலைப்பில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கீமோதெரபி என்ற சிகிச்சைக்காக தலைமுடியை இழந்தவர்களுக்கு உதவும் வகையில், தலைமுடியை தானமாக வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், பி.எஸ்.ஜி., மேலாண்மை கல்லூரி, பெண்கள் பாலிடெக்னிக் உள்ளிட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அதிகபட்சமாக பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் 30 பேர் தங்களது முடியை தானமாக கொடுத்தனர்.



இதில், சேகரிக்கப்பட்ட முடியை இந்திய புற்றுநோய் மையத்தின் உதவியுடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க இருக்கின்றனர். 



இது தொடர்பாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மாணவர் டி. திரவியம் பேசுகையில், " கோவை மாநகரில் உள்ள கல்லூரிகிளில் இருந்து ஏராளமான மாணவிகள் தங்களது முடியை தானமாக வழங்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து 10 இன்ச்சிற்கும் அதிகமான முடிகளைப் பெற்றுள்ளோம்," என்றார். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...