முறையான குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து பல்லடம் ஊராட்சி அலுவலகம் முற்றுகை

திருப்பூர் : கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து பல்லடம் ஊராட்சி அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் : கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து பல்லடம் ஊராட்சி அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

பல்லடத்தை அடுத்த வடுகபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது சின்னூர் வடுகபாளையம் கிராமம். இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 6 மாதங்களாக குடிநீர் பற்றாக்குறை நிலவி வருவதாகத் தெரிகிறது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் மனு அளித்துள்ளனர். இருப்பினும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. 



இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தசாமியை முற்றுகையிட்டு பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 



கடந்த சில மாதங்களாகவே தங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும், குடிநீருக்காக அவதியுறுவதாகவும் அவரிடம் புகார் தெரிவித்தனர். அப்போது, கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர் உறுதியளித்ததையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேலும், நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாக பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...