அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சின்னசாமி கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிப்பு

கோவை : நிதி மோசடி வழக்கில் கைதான முன்னாள் எம்.எல்.ஏ., சின்னசாமியை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அதி.மு.க., தலைமையகம் விடுவித்துள்ளது.

கோவை: நிதி மோசடி வழக்கில் கைதான முன்னாள் எம்.எல்.ஏ., சின்னசாமியை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அதி.மு.க., தலைமையகம் விடுவித்துள்ளது. 

கோவை, சிங்காநல்லூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.,வாகவும், அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் செயலாளருமாக இருந்தவர் சின்னசாமி. இவர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணா தொழிற்சங்கத்தில் தலைமை பொறுப்புகளில் இருந்தார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் சின்னசாமியை அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தனர்.

இதையடுத்து, அவர்களை துரோகி என விமர்சித்த சின்னசாமி, தனது நீக்கம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், அவர் டி.டி.வி., தினகரன் அணியில் இணைந்திருந்தார். அங்கும் அவருக்கு தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.

இதனிடையே, நேற்று மாலை சின்னசாமியை சென்னை பெருநகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். நிதி முறைகேட்டில் ஈடுபட்ட புகாரில், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, அவரை போலீஸார் கோவையில் இருந்து சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

இந்த நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில், கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் முன்னாள் எம்.எல்.ஏ., சின்னசாமி நடந்து கொண்டுள்ளார். 

மேலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கம் மற்றும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால், கோவை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னசாமி, அண்ணா தொழிற்சங்கப் பேரவை முன்னாள் செயலாளர் உள்பட கழகத்தின் அனைத்து அடிப்படை உறுப்பினர் என அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். ஆகவே, அவருடன் கழகத்தின் உடன்பிறப்புகள் எந்தவிதமான தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...