பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் துப்புரவு பணியில் ஈடுபடும் ஊழியர்கள் : உயிரை மதிக்குமா மாநகராட்சி..?

கோவை: பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் துப்புரவு பணியில் ஈடுபடுவதற்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், பாதாள சாக்கடை இறப்புகளும், சுகாதாரமின்றி கைகளில் சாக்கடை வடிகால்களை சுத்தம் செய்யும் சம்பவங்களும் கோவை மாநகரில் தொடர்ந்து நடப்பது வேதனையளிப்பதாக உள்ளது.

சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள கமலா மில் குட்டை பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கிழக்கு மண்டலம், வார்டு எண் 64-க்கு உட்பட்ட இப்பகுதியில் சீரான வடிகால் வசதியில்லாததால், குடியிருப்புகளை சுற்றி கழிவுநீர் சூழ்ந்து இப்பகுதி மக்கள் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர்.

இப்பகுதியின், பிரதான சாலையை ஒட்டியுள்ள வடிகாலில் தற்போது அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியுள்ளது. இதை சரிசெய்ய மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். ஆனால், பாதாள சாக்கடைக்குள் இறங்கி அடைப்பை சரிசெய்யும் துப்புரவு பணியாளர்களுக்கு உரிய உபகரணங்கள் ஏதும் வழங்கப்படாததால், உயிருக்கு ஆபத்தான நிலையில், சுகாதரமற்ற சூழலில் பணியாளர்கள் வேலைசெய்து வருகின்றனர்.

பாதாள சாக்கடைக்குள் இறங்குவதற்கும், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் துப்புரவு பணியில் ஈடுபடுவதற்கும் அரசு தடை விதித்துள்ள நிலையில், மாநகராட்சி அதிகாரிகளே துப்புரவு பணியாளர்களை உபகரணங்கள் இல்லாமல் வேலை செய்ய நிர்பந்திப்பது சமூக ஆர்வலகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...