கோவை மாவட்ட நீர்த்தேக்கங்களின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் இன்றைய (ஆகஸ்ட் 11) நீர்மட்டம் நிலவரத்தை தற்போது காணலாம்

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் இன்றைய (ஆகஸ்ட் 11) நீர்மட்டம் நிலவரத்தை தற்போது காணலாம்

கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகப் பெய்த தொடர் மழையினால், நீர்நிலைகளில் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகிறது. இதன் ஒருபகுதியாக வால்பாறையில் கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் 11 மி.மீ. மழையும், சின்னக்கல்லாரில் 23 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது. சின்னக்கல்லார் அருவிக்கு வரும் நீரின் அளவு 1,552.08 கனஅடியாகும். அருவியில் இருந்து சுரங்கம் வழியாக 1,552.08 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 



நீரார் அணையில் மழையின் அளவு 24 மி.மீ., ஆகும். அணைக்கு விநாடிக்கு 166.90 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 193.52 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சோலையாறு அணையில் 25 மி.மீ., மழை பெய்துள்ளது. நீர்மட்டம் 161.15 (160) அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 5,452.14 கனஅடியாக உள்ளது. விநாடிக்கு 2,830.83 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பவர் ஹவுஸ் 1-க்கு மின் உற்பத்திக்கு 135.76 கன அடியும் சேடல் வழியாக 992.82 கனஅடி என மொத்தம் 1,128.58 கனஅடி நீர் பரம்பிகுளம் அணைக்கு செல்கிறது. இதேபோல, பவர் ஹவுஸ் 2-க்கு 630.67 கன அடியும், ஷட்டர் வழியாக 1,311.81 கனஅடி என 1,942.48 கனஅடி தண்ணீர் கேரளா செல்கிறது.

இதேபோல, சிறுவாணி அணையின் மொத்த நீர்மட்டம் 49.53 கனஅடி. தற்போது, 47.34 அடி நீர் உள்ளது. 100.00 அடி நீர் மட்டம் கொண்ட பில்லூர் அணையில் தற்போது 91.00 கனஅடி நீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4,691 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 120 அடி நீர்மட்டம் கொண்ட ஆழியார் அணையில் தற்போது 118.30 அடி நீர் உள்ளது. அணையின் நீர்வரத்து வினாடிக்கு 893 கனஅடியாக உள்ளது. 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...