Exclusive:பாம்புகள் விளையாடும் இடமாக மாறிய ஆர்.கே நகர் சிறுவர் பூங்கா..! : அப்போ சிறுவர்கள் விளையாவடுவது எங்கே..?

கோவை : ஒண்டிப்புதூர் பகுதியில் அமைந்துள்ள ஆர்.கே., நகர் சிறுவர் பூங்கா கடந்த இரண்டு வருடங்களாகப் பூட்டியே கிடப்பதால், பூங்கா முழுவதும் புதர் மண்டி தற்போது பாம்புகளின் வசிப்பிடமாக மாறியுள்ளது.


கோவை : ஒண்டிப்புதூர் பகுதியில் அமைந்துள்ள ஆர்.கே., நகர் சிறுவர் பூங்கா கடந்த இரண்டு வருடங்களாகப் பூட்டியே கிடப்பதால், பூங்கா முழுவதும் புதர் மண்டி தற்போது பாம்புகளின் வசிப்பிடமாக மாறியுள்ளது.



கோவை மாநகரின் குடியிருப்பு பகுதிகளில் குழந்தைகள் விளையாடுவதற்காகவும், பொதுமக்கள் நடைப்பயிற்சி செய்வதற்காகவும் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நடைபாதை மேடை கொண்ட சிறுவர் விளையாட்டு பூங்காக்களை மாநகராட்சி நிர்வாகம் உருவாக்கியுள்ளது. இவை தவிர மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்போடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நவீன வசதிகளோடு பசுமை பூங்காக்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு பல லட்சம் செலவில் கட்டப்படும் பூங்காக்கள் முறையாகப் பராமரிக்க படாததால், பெரும்பாலானவை மக்களுக்குப் பயன்படாமல் செடி, கொடிகள் நிறைந்து புதர் மண்டிக் கிடக்கிறது. 



ஒண்டிப்புதூர் கிழக்கு மண்டலம், வார்டு எண். 61-க்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள ஆர்.கே. நகரில் இரண்டு வருடங்களுக்கு முன்பு, மாநகராட்சி சார்பில் சிறுவர்கள் விளையாட்டு பூங்கா கட்டும் பணிகள் ஒப்பந்ததாரர் மூலம் மேற்கொள்ளப்பட்டது. சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் நடைமேடை, சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், எல்.இ.டி., மின் விளக்குகள், இருக்கைகள், தண்ணீர் தொட்டி மற்றும் குழாய்கள் என அனைத்து வசதிகளோடும் உருவாக்கப்பட்ட இந்தப் பூங்கா, கட்டிமுடித்து இரண்டு வருடங்கள் ஆகியும் திறக்கப்படவில்லை.



'பூங்காவை ஒட்டி சேரன் நகர், ஆர்.கே., நகர், இட்டேரி சாலை, பட்டனம் கட் சாலை போன்ற பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிக்கும் சிறுவர்கள் விளையாடவும், முதியவர்கள் நடைப்பயிற்சி செய்யவும் கட்டப்பட்ட பூங்கா ஒருநாள் கூட மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவில்லை. இரண்டு வருடங்களாகப் பூட்டியே கிடப்பதால், பராமரிப்பின்றி சிறிய காடுபோல் காட்சியளிக்கிறது. நிறுவப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்து வருகின்றன. இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளருக்கும், முதலமைச்சர் அலுவலகத்துக்கும் மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பியும், பதிலுமில்லை நடவடிக்கையுமில்லை' என்கிறார் இப்பகுதியில் ஐந்து வருடங்களாக வசிக்கும் ஐ.டி ஊழியரான பி.பரமேஷ்.



சிறுவர் பூங்கா சிறிய காடாக மாறியுள்ளதால், பூங்காவை ஒட்டியிருக்கும் குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் நுழைந்து விடுவதாகவும், பூங்காவை ஒட்டிய சாலைகளில் நடைப்பயிற்சி செய்யும்போது பாம்புகள் அச்சுறுத்துவதாகவும் இப்பகுதியினர் புகாரளிக்கின்றனர்.



இதுகுறித்து விசாரித்தபோது மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்ததாரருக்கு வழங்க வேண்டிய தொகையை கொடுக்காததால், ஒப்பந்ததாரர் பூங்காவை பூட்டிவைத்துள்ளது தெரியவந்தது. 



இதுமட்டுமின்றி, இந்த பகுதியிலிருந்து திருச்சி சாலையை சென்றடையப் பயன்படுத்தப்படும் இட்டேரி சாலை மற்றும் பட்டனம் குறுக்கு சாலை ஆகிய இரண்டு சாலைகளும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. இந்தப் பகுதி எதிர்க்கட்சியினர் தொகுதியில் இருப்பதால் இங்கு மேற்கொள்ளப்பட இருந்த அனைத்து வளர்ச்சிப் பணிகளும் ஆளும் கட்சியினரின் தலையீட்டால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.



வரி வசூலில் எந்தப் பாரபட்சமும் பார்க்காத மாநகராட்சி அதிகாரிகள், மக்கள் நலனுக்கான வளர்ச்சி பணிகளையும் நேர்மையாக நடுநிலையோடு மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...