கோவையில் நாளை நடக்கிறது பள்ளி மாணவர்களுக்கான வினாடி - வினா போட்டி

கோவை: கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான ஒருநாள் வினாடி - வினா போட்டி சுகுணா பி.ஐ.பி., பள்ளியில் நாளை (ஆக.,11) நடக்கிறது.

கோவை:  கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான ஒருநாள் வினாடி - வினா போட்டி சுகுணா பி.ஐ.பி., பள்ளியில் நாளை (ஆக.,11) நடக்கிறது. 

ஐ.ஐ.டி., மெட்ராஸ் சார்பில் சார்பில் நாடு முழுவதும் முக்கிய 20 நகரங்களில் வினாடி - வினா போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவையில் உள்ள சுகுணா பி.ஐ.பி., பள்ளியில் ஒருநாள் வினாடி - வினா போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 8 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள், அணிக்கு 2 பேர் என்ற அடிப்படையில் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், போட்டிகள் அறிவியல், பொதுஅறிவு மற்றும் கணிதம் ஆகியவற்றின் அடிப்படையில் நடத்தப்படும். மாணவர்கள் கட்டாயம் பள்ளியின் அடையாள அட்டைக் கொண்டு வரவேண்டும். ஒரு அணியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் இருவரும் வெவ்வேறு பள்ளியைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். போட்டியாளர்கள் 9 மணிக்கு முன்னதாக நிகழ்வரங்கிற்கு வரவேண்டும். 10 மணிக்கு போட்டிகள் ஆரம்பிக்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"கடந்த முறை நடைபெற்ற வினாடி - வினா போட்டியில் 150-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். தற்போது, போட்டியாளர்களுக்கு வசதியாக ஆன்லைன் முன்பதிவு மற்றும் போட்டி நடக்கும் அரங்கில் பதிவு செய்யும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த முறையும் அதிகளவிலான போட்டியாளர்கள் பங்கேற்பாளர்கள் என நம்புகிறோம்," என்றார் போட்டி ஒருங்கிணைப்பாளர் பி. அஸ்வத் ஹரி.

இந்தப் போட்டியில் முதல் 5 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெறும். மொத்தமாக 3 அணிகள் ஐ.ஐ.டி., மெட்ராஸில் நடக்கும் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர். வெற்றி பெறும் அணிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்படும். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...