கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் சமாதிகளுக்கு சிக்கல்..! : உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக கோவையில் டிராபிக் ராமசாமி பேட்டி

கோவை: மெரினாவில் உள்ள கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் சமாதிகளை அகற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகக் கோவையில் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.


கோவை:  மெரினாவில் உள்ள கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் சமாதிகளை அகற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகக் கோவையில் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மனு அளித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- மேட்டுப்பாளையம் திம்மனூர் பகுதியில் குடிநீர் பிரச்சனை தொடர்பாக ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன். ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மக்களுக்கு சேவை செய்யக் காத்திருக்கிறார்கள். அரசியல்வாதிகள் தான் அதனை பயன்படுத்திக் கொள்வதில்லை. பொதுமக்கள் குறைகளை அரசியல்வாதிகளிடம் கூறாமல் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். 



தி.மு.க., வழக்கு இருந்திருந்தால் மெரினாவில் இன்று கருணாநிதி சமாதி அங்கு அமைத்து இருக்க முடியாது. எனது வழக்கை வாபஸ் வாங்கக் கோரி, எனது வழக்கறிஞரைப் பொறுப்பு நீதியரசர் மிரட்டினார். வாபஸ் வாங்காத காரணத்தால் தான் எனது வழக்கை தள்ளுபடி செய்து விட்டார். ஒரு ஆண்டிற்கு மேலாக நடைபெற்ற வழக்கை தள்ளுபடி செய்ததின் மூலம் பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ் மீது நல்ல அபிப்ராயம் இல்லை. 

இந்த வழக்கை வாபஸ் வாங்கக் கோரி தி.மு.க.,வினர் என்னையும் எனது வழக்கறிஞரையும் மிரட்டினர். மேலும், மெரினாவில் சமாதி அமைக்க கூடாது என பொதுநல வழக்கு தொடுத்தவர்கள் ஏன் வாபஸ் பெற வேண்டும். மெரினாவில் அமைந்துள்ள சமாதிகளை எடுப்பது தொடர்பான தனது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த உத்தரவு நகல் வந்தவுடன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளேன், என்றார். 



Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...