குனியமுத்தூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி : பெண் பலி, சிறுமிகள் உள்பட மூவருக்கு தீவிர சிகிச்சை

கோவை : குனியமுத்தூர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில், பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இரண்டு சிறுமிகள் உள்பட 3 பேருக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை: குனியமுத்தூர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில், பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இரண்டு சிறுமிகள் உள்பட 3 பேருக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குனியமுத்தூர் காமராஜர் வீதி அய்யப்பன் நகரைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (45). இவருக்கு சசிகலா (36) என்ற மனைவியும், சினேகா (17) மற்றும் பிரேமவர்ணா (13) ஆகியோர் உள்ளனர். இவர்கள் நேற்று இரவு விஷம் அருந்தி மயங்கிய நிலையில் வீட்டில் இருந்தனர். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். நேற்றிரவு முதல் நால்வருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மேல்சிகிச்சைக்காக ஜானகிராமனின் மனைவி சசிகலா மட்டும் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், அங்கு சசிகலா சிகிச்சை பலனின்றி சில மணி நேரத்திலேயே உயிரிழந்தார். பின்னர் மற்ற மூன்று பேரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே, இவர்கள் எதற்காக தற்கொலைக்கு முயன்றனர்..? கடன் தொல்லைகள் ஏதாவது உள்ளதா..? என்ற கோணத்தில் குனியமுத்தூர் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...