ஆஸி.,யில் விசா ரத்தால் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்கள் : அவப்பெயரை ஏற்படுத்தவே வீண் வதந்தி என கோவையைச் சேர்ந்த நிறுவனம் விளக்கம்

கோவை: ஆஸ்திரேலியாவில் தமிழக மற்றும் கேரள மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டதாக எந்தவொரு புகாரும் இல்லை என்றும், தங்கள் நிறுவனத்தின் பெயரைக் கெடுப்பதற்காக வீண் வதந்திகளைப் பரப்பி வருவதாக கோவையைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.


கோவை: ஆஸ்திரேலியாவில் தமிழக மற்றும் கேரள மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டதாக எந்தவொரு புகாரும் இல்லை என்றும், தங்கள் நிறுவனத்தின் பெயரைக் கெடுப்பதற்காக வீண் வதந்திகளைப் பரப்பி வருவதாக கோவையைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 

ஆஸ்திரேலியாவில் எம்.பி.ஏ., படிக்கச் சென்ற இந்திய மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இன்று காலை கோவைச் சேர்ந்த சில தனியார் கன்சல்டிங் நிறுவனத்திலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு படிக்கச் சென்ற மாணவர்களின் விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

இதுகுறித்து கோவை சேர்ந்த நிறுவனத்தினர் கூறுகையில், "இதுவரை எங்கள் நிறுவனத்தின் மீதோ அல்லது எங்கள் மீதோ எந்தவித புகாரும் காவல் துறையில் பதிவு செய்யப்படவில்லை. எனவே, எங்களிடம் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற மாணவர்கள் அல்லது வேலைக்குச் செல்பவர்கள் எந்தவித பாதிப்பும் அடையாமல் உள்ளனர். எனவே, இது பொய்யான தகவலாகும். தேவையற்ற வீண் வதந்தியைப் பரப்பி வருகின்றனர்," இவ்வாறு அவர் கூறினார். 



மேலும், இதுகுறித்து கோவை ஆர்.எஸ்.,புரம் பகுதியைச் சேர்ந்த 'ஷியா கன்சல்டிங்' நிறுவனத்தின் நிறுவன இயக்குனர் அருண் கூறியதாவது:- நாங்கள் கடந்த 8 ஆண்டுகளாக கன்சல்டிங் நிறுவனம் நடத்தி வருகிறோம். எங்களிடமிருந்து கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளுக்கு வேலைக்கு ஆட்களையும், படிப்பதற்கு மாணவர்களையும் விசா மற்றும் குடியுரிமை பெற்று அனுப்பி வருகிறோம். இதுவரை எங்கள் நிறுவனத்தின் மீது எந்தவித புகாரும் வந்ததில்லை. 

தற்போது, இந்தியாவைச் சேர்ந்த 22 மாணவர்களின் விசாக்கள் ஆஸ்திரேலியாவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவை போலியாக தயாரிக்கப்பட்ட அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், இன்று காலை சில தொலைக்காட்சிகளில் கோவையைச் சேர்ந்த சில நிறுவனங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டு, அவற்றில் இருந்து சென்ற மாணவர்கள்தான் என்று தகவல்கள் பரவி அதைப் பார்த்தேன். அந்த சில நிறுவனங்களின் பெயர்களில் என்னுடைய நிறுவனத்தின் பெயரும் ஒன்று. எனவே, இதுவரை எங்கள் நிறுவனத்தின் மீது எந்தவித புகாரும் காவல் துறையிலோ அல்லது வெளியுறவுத்துறையின் மூலமாகவோப் பதிவு செய்யப்படவில்லை.

மேலும், மாணவர்களின் பெற்றோர்கள் எங்களிடம் எந்தவிதப் புகாரும் கூறவில்லை. மேலும், மாணவர்கள் நன்றாகத்தான் வெளிநாடுகளில் படித்து வேலை பார்த்து வருகின்றனர். நாங்களும் அவர்களுடன் தொடர்பில் தான் உள்ளோம். இது வீண் வதந்தியைப் பரப்புவது ஆகும். மேலும், இது சம்பந்தமாக தற்போது நான் கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் சென்று இது பற்றி விசாரித்தேன். அவர்கள் இதுவரை எந்தப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்தனர். மேலும், அவ்வாறு ஏதேனும் புகார்கள் வந்தால், என்னிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். நானும் முழு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகத் தெரிவித்து விட்டு வந்துள்ளேன்.

எனவே, யாரும் இந்த வதந்திகளை நம்பவேண்டாம். பொதுவாக இந்தியாவில் இருந்துதான் 22 மாணவர்களின் விசாக்களை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, வேண்டுமென்றே சிலர் எங்கள் நிறுவனத்தின் பெயரை கெடுக்கப் பார்க்கின்றனர். கோவையில் முதலிடத்தில் இருப்பது எங்கள் நிறுவனம். எனவே, எங்களது நிறுவனத்தின் பெயரை தவறாக பரப்புரை செய்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கலாம். இது தொடர்பான முழுவிபரம் விசாரணைக்குப் பின்னர் தான் தெரிய வரும். எனவே, யாரும் இந்த வதந்திகளை நம்ப வேண்டாம், என்றார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...