Exclusive: லாலி ரோடு ஜங்சனில் விரைவில் வருகிறது மேம்பாலம் ; டெண்டருக்கு சமர்ப்பிக்க 23-ம் தேதி கடைசி நாள்

கோவை : லாலி ரோடு ஜங்சனில் மேம்பாலம் அமைப்பதற்கான மதிப்பீடு செய்ய விண்ணப்பங்களை பெற்றவர்கள் 23-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.


கோவை : லாலி ரோடு ஜங்சனில் மேம்பாலம் அமைப்பதற்கான மதிப்பீடு செய்ய விண்ணப்பங்களை பெற்றவர்கள் 23-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது. 

லாலி ரோடு ஜங்சனில் பிரியும் நான்கு சாலைகள் மார்க்கமாக காந்திபார்க், தடாகம், வடகோவை மற்றும் வடவள்ளி போன்ற பகுதிகளுக்கும், அங்கிருந்து மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்ல முடியும். வடவள்ளி மற்றும் தடாகம் போன்ற பகுதி வாழ் மக்கள், நகரப்பகுதிக்குள் நுழைவதற்கு இந்த சாலையையே பிரதான சாலையாக பயன்படுத்தி வருகின்றனர்.



கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் போன்ற கல்லூரிகள் அமைந்துள்ள இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், லாலி ரோடு ஜங்சனில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பரிந்துரை

மாவட்ட ஆட்சியர்கள் சந்திப்பு கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், இந்த மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை பரிந்துரைக்கப்பட்டது. கோரிக்கையை பரிசீலித்த முதலமைச்சர் பாலம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும்., பாலம் அமைப்பதற்காக தனியாரிடம் இருந்து டெண்டர் பெறவும் உத்தரவிட்டார்.



டெண்டர்

இதனடிப்படையில், மாநில நெடுஞ்சாலை துறை (கோவை) சார்பில் முதல்கட்டமாக மேம்பாலம் கட்ட மதிப்பீடு செய்யும் பணிகளுக்கு டெண்டர் கோரியுள்ளது. டெண்டரை வரும் 23-ம் தேதி மதியம் 3 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெண்டரில், பாலத்தின் மாதிரி வரைபடம், பாலம் அமைப்பதற்கான மொத்த தொகை மற்றும் பாலத்தின் நீள-அகலங்கள் மற்றும் போன்றவை இடம்பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநில நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "லாலி ரோடு ஜங்சனில் மேம்பாலம் அமைக்க ஆகும் மதிப்பீடு மற்றும் அளவு குறித்து ஆய்வு செய்து சமர்ப்பிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதன் பிறகு தான் மேம்பாலம் அமைக்க ஆகும் செலவு குறித்து கூற முடியும். தகுதியான டெண்டர் முடிவு செய்தவுடனே பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும்." என்றார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...