கருணாநிதி மறைவின் எதிரொலி : கோவையில் அரசுப் பேருந்து மீது கல்வீச்சு

கோவை: உடல்நலக்குறைவால் தி.மு.க., தலைவர் கருணாநிதி உயிரிழந்த நிலையில், கோவையில் அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: உடல்நலக்குறைவால் தி.மு.க., தலைவர் கருணாநிதி உயிரிழந்த நிலையில், கோவையில் அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

11 நாளாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவரின் உயிர் இன்று மாலை 06.10 மணியளவில் பிரிந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதலே அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்ததால், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகம் முழுவதும் பதற்றமான சூழலே நிலவி வந்தது. எனவே, மாநிலம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் காந்திபுரம், டவுன்ஹால், சிங்காநல்லூர், சாய்பாபா கோவில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இன்று இரவு 7 மணியளவில் காந்திபுரத்தில் இருந்து புதுபதி நோக்கி 96 என்ற எண் கொண்ட அரசுப் பேருந்து ஒன்று கொண்டிருந்தது. குனியமுத்தூர் இடையர்பாளையம் அருகே சென்ற இந்தப் பேருந்தின் மீது மர்ம நபர்கள் சிலர் கற்களை தூக்கி எந்து தாக்குதல் நடத்தினர். அதிர்ஷ்டவசமாகப் பேருந்தில் இருந்த பயணிகளுக்க எந்தவித காயமும் ஏற்படவில்லை. பின்னர், இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் குனியமுத்தூர் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...