கருணாநிதி மறைவு : அரசியல் தலைவர்கள் இரங்கல்

சென்னை: உடல்நலக்குறைவால் காலமான தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்னை: உடல்நலக்குறைவால் காலமான தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "நாட்டின் மிகப்பெரும் தலைவர்களுள் ஒருவர் கருணாநிதி. சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர், மக்கள் விரும்பும் தலைவராக திகழ்ந்தவர். அவரது மறைவை கேட்டு துயரத்தில் ஆழ்ந்தேன்", என பதிவிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் (தமிழில்): திரு.கருணாநிதி அவர்களின் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன். கலைஞர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நம் வாழ்வில் வல்லமைமிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார். எனது ஆழ்ந்த இரங்களை அவரது குடும்பத்தாருக்கும், மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன், இவ்வாறு கூறியுள்ளார். 

குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு: இந்தியாவின் மிக மூத்த அரசியல் ஆளுமையான கருணாநிதியின் மறைவால் துயரம் அடைந்தேன். என்றார். 

முதலமைச்சர் பழனிசாமி: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பாகும், எனக் கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த்: என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத கருப்பு நாள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். எனக் குறிப்பிட்டுள்ளார். 

ராமதாஸ் (பா.ம.க.,) : அன்பு நண்பர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மறைவு பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும், துயரத்தையும் அளிக்கிறது. கலைஞரின் மறைவு தமிழக அரசியலுக்கும், கலை உலகுக்கும் உண்மையாகவே ஈடு செய்ய முடியாத இழப்பு. கண்ணீருடன் நான், எனக் கூறியுள்ளார். 

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி: இந்தியா தனது மகனை இழந்து விட்டது, என்றார். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...