பேராசிரியர் கொலை வழக்கில் கைதான ராக்கெட் ராஜா ஜாமீனில் விடுதலை ; பதற்றத்தை ஏற்படுத்திய ஆதரவாளர்கள்

கோவை : நெல்லையில் பேராசிரியர் செந்தில்குமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நாடார் மக்கள் சக்தி நிறுவன தலைவர் ராக்கெட் ராஜா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், சிறையில் இருந்து விமான நிலையம் வரை பரபரப்பான சூழல் நிலவியது.

கோவை : நெல்லையில் பேராசிரியர் செந்தில்குமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நாடார் மக்கள் சக்தி நிறுவன தலைவர் ராக்கெட் ராஜா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், சிறையில் இருந்து விமான நிலையம் வரை பரபரப்பான சூழல் நிலவியது.

கடந்த பிப்ரவரி மாதம் நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் பேராசிரியர் செந்தில்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த ராக்கெட் ராஜா, கடந்த மே மாதம் சென்னையில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, கடந்த 3 மாதமாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு, மதுரை உயர்நீதிமன்ற கிளை கடந்த வெள்ளிக்கிழமை அன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்த நிபந்தனையில் மும்பை கமிஷனர் அலுவலகத்தில் காலை, மாலை கையெழுத்திடவும் உத்தரவு இடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ராக்கெட் ராஜா சிறையில் இருந்து இன்று காலை வெளியே செல்ல இருந்த நிலையில், அவரை வரவேற்க ஏராளமானோர் சிறை வளாகம் முன்பு குவிந்தனர். எனவே, பாதுகாப்பு கருதி, அவரை வெளியே அனுப்புவதில் போலீசார் தாமதம் செய்தனர். மாலை 5 மணியாகியும் ராக்கெட் ராஜா விடுதலை செய்யப்படவில்லை. இதனால், ஆதரவாளர்களின் கூட்டம் மேலும் அதிகரித்தது.

பின்னர், சுமார் 6 மணியளவில் கோவை மத்திய சிறையில் இருந்து ராக்கெட் ராஜா சிறையை விட்டு வெளியே வந்ததும், அவரது ஆதரவாளர்கள் ஆள் உயர மாலையை அணிவித்து சிறப்பான வரவேற்பை அளித்தனர். அத்துடன், பூ கிரீடத்தை தலையில் வைத்துக் கொண்டாடி வீர வாளை பரிசாக கொடுத்துக் கோஷமிட்டனர். அப்போது, ஆராவாரத்தின் உச்சிக்கு சென்ற ஆதரவாளர்கள், போலீசாரை பின்னுக்கு தள்ளி பரபரப்பை ஏற்படுத்தினர்.

சுமார் 50-க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் சிறையின் வெளியே உள்ள சாலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி, ராக்கெட் ராஜாவின் வாகனத்தை சீறிப் பாய்ந்த வண்ணம் இயக்கினர். இந்த வாகனத்தைப் பின் தொடர்ந்த படி சுமார் 20-க்கும் மேற்பட்ட கார்கள் விமானம் நிலையம் வரை பின்னரே பயணித்தது. இப்படி செல்லும் வழியெல்லாம் பொதுமக்கள் முகம் சுளிக்கும்படி கோஷங்களும், பரபரப்பும் ஏற்பட்டது.

கோவை விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்வதற்காக சென்ற ராக்கெட் ராஜாவை பார்க்க வேண்டும் எனக் கூறி அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டனர். அப்போது அங்கிருந்த ஆய்வாளர், அவர்களை விதியை மீறி நிற்பதாககே கூறி வெளியேருமாறு கூறினார். ஆனால், அங்கிருந்த ஆதரவாளர்கள் ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், விமான நிலையத்தின் முன்புறம் சிறிது நிமிடம் அமர்ந்து காவல்துறையைக் கண்டித்து கோஷமிட்டனர். இதனால், விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ராக்கெட் ராஜா விடுதலையினால், கோவையில் இன்று காலை தொடங்கிய பரபரப்பு மாலை விமான நிலையம் சென்று சேரும் வரை விட்டபாடில்லை. பொதுமக்களின் பாதுகாப்புக்கு நிற்க வேண்டிய காவல்துறையினர், தேவையற்று சிறையிலிருந்து வெளி வருவோருக்குப் பாதுகாப்புக்கென நேரத்தை வீணடிப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...