கோவையில் நாளை 13 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்காது

கோவை: மத்திய அரசின் போக்குவரத்து சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்க வேண்டும், இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் நாளை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கள் இணைந்து நடத்தும் இந்த போராட்டத்தில் கோவை சார்பில் 12 தொழிற்சங்கள் பங்குபெறுகின்றன.

இது குறித்து தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளனம் மாநில துணைத்தலைவர் மற்றும் கோவை மாவட்ட பொதுச்செயலாளர் சுகுமாரன் சிம்ப்ளிசிட்டி-யிடம் கூறுகையில், "நாடு முழுவதும் வாகனம் இயக்கும் தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர். 

கோவை மாநகரில் 13 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்குகின்றன. இவை அனைத்தும் போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளன. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு போக்குவரத்து சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டால் வாகனங்களை இயக்கும் தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படும்.

அதுமட்டுமல்ல விபத்து என்பது எதிர்பாராத விதமாக நடைபெறுவது. இந்த சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டால் விபத்து நடந்தால் நேரடியாக ஒட்டுநனர் சிறை செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இது அவர்களின் குடும்பங்களை முற்றிலும் பாதிக்கும்.

மத்திய, மாநில அரசுகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். விலை உயர்வைக் குறைக்க வேண்டும்." என்றார்.

ஆட்டோ ஓட்டுனர் ராமானுஜம் கூறுகையில், "கடந்த ஆண்டு 5000 ரூபாய் கட்டிய இன்சூரன்ஸ் கட்டணம் இந்தாண்டு 8500 ரூபாய். மூன்று சக்கர வாகனம் ஒட்டும் எங்களால் இதனை எப்படி கட்ட முடியும். தினசரி வருமானம் குறைந்து வரும் இந்த நேரத்தில் இது போன்ற விலை வாசி உயர்வுகளால் நாங்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும்." என்றார்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் கால் டாக்சி ஒட்டுனர்கள், லாரி ஒட்டுனர்கள் , தனியார் பேருந்து ஒட்டுனர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...