2 மாதங்கள் கழித்து உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு : தமிழக தேர்தல் ஆணையம்

சென்னை: உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு இன்னும் 2 மாதங்கள் கழித்து வெளியிடப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

சென்னை: உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு இன்னும் 2 மாதங்கள் கழித்து வெளியிடப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், ‘உள்ளாட்சி தேர்தலை 2017–ம் ஆண்டு நவம்பர் 17–ந் தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும்’ என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 4–ந் தேதி உத்தரவிட்டனர். ஆனால், இந்த உத்தரவை தமிழக தேர்தல் ஆணையத்தின் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், செயலாளர் ராஜசேகர் ஆகியோர் அமல்படுத்தவில்லை. இதையடுத்து அவர்கள் மீது தி.மு.க., சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 31–ந் தேதி) தீர்ப்பு வழங்குவதாக இருந்தது. ஆனால், அன்று தீர்ப்பு வழங்கப்படவில்லை. அதேநேரம், ‘தேர்தல் நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை ஏன் தேர்தல் நடத்தவில்லை..? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் சரமாரியாக எழுப்பினார்கள். அதற்கு மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நெடுஞ்செழியன், ‘இந்த வழக்கில், மூத்த வழக்கறிஞர் ஆஜராக உள்ளதால், விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார். 

இதையடுத்து, விசாரணையை இன்று தள்ளிவைத்த நீதிபதிகள், ‘உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை அன்று தாக்கல் செய்யவில்லை என்றால், மாநில தேர்தல் ஆணையர், செயலாளர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்யவில்லை. வார்டுகள் வரையறை செய்யப்பட்டு அரசுக்கு ஆகஸ்ட் 31-ல் அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதன் பின்னர் 2 மாதங்கள் கழித்து உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...