கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விசாரித்தார்.

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விசாரித்தார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வந்தார். பிற்பகல் 2.20 மணி அளவில் விமானம் நிலையம் வந்த அவரை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சபாநாயகர் தனபால், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர்.

இதன் பின்னர் அங்கிருந்து நேராக காவேரி மருத்துவமனைக்கு அவர்கள் சென்றார். அங்கு, கருணாநிதி உடல் நலம் குறித்து ஸ்டாலின் மற்றும் எம்.பி., கனிமொழியிடம் கேட்டறிந்தார். குடியரசுத் தலைவருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் ஜெயக்குமார் உடன் சென்றனர். குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.



இதனிடையே, கருணாநிதியின் சந்திப்பு குறித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் கூறியிருப்பதாவது :- திரு. கருணாநிதி அவர்களைச் சென்னையில் சந்தித்தேன். அவர்களின் குடும்பத்தார் மற்றும் மருத்துவரிடம் அவருடைய உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், முதுபெரும் தலைவருமான கலைஞர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...