திருப்பூரில் கடன் தொல்லையால் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை



திருப்பூர்: திருப்பூர் அருகே கடன் தொல்லை காரணமாக விவசாயி தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தாராபுரம் அருகே உப்பாறு அணை செல்லும் சாலையில் கெத்தல்ரேவ் என்ற கிராமத்தில் முத்துசாமி என்பவர் கடந்த பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார். இவர், தனது தாய், தந்தை, மனைவி செல்வி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஒன்றாக வசித்து வருகிறார். தமிழகத்தில் பருவ மழை அதிகளவு பெய்திருந்தாலும், உப்பாறு அணைக்கு நீர் வரத்து இல்லாததால், விவசாயம் மேற்கொள்ள முடியாமல் தவித்து வந்துள்ளார். இதன் காரணமாக விவசாயத்திற்காகள மற்றும் சொந்த செலவுகளுக்கு ரூ. 25 லட்சம் வரையிலும் கடன் பெற்றுள்ளார். 



தொடர்ந்து கடன் கொடுத்தவர்களின் நெருக்கடியால் தவித்து வந்த முத்துசாமி கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். வீட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக முத்துசாமியின் மனைவி செல்வி, அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்திற்குக் கூலி வேலைக்கும் சென்று வருகிறார். இந்நிலையில், கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்த முத்துசாமி நேற்றிரவு தனது மகன் மாணிக்க சத்தியமூர்த்தி(4), மகள் ராஜலட்சுமி (11) இருவரையும் வீட்டினுள் தூக்கிட்டு கொலை செய்து விட்டு, பின்னர், தனது தாய் மயிலாத்தாளுடன்(70) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

காலை தூங்கி எழுந்து வெளியே வந்து பார்த்த முத்துசாமியின் தந்தை வேலுச்சாமி, தனது மனைவி, மகன், பேரக்குழந்தைகள் தூக்கில் தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, இவர் அளித்த தகவலின் பேரில் குண்டடம் போலீசார் உடல்களைக் கைப்பற்றி தாராபுரம் அரசு மருத்துவமனைக்காகப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடன் மற்றும் கந்துவட்டிக் கொடுமையால் தற்கொலை சமபவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...